பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளை கண்பிடிக்க தீவிர ஆராய்ச்சி

பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளை கண்பிடிக்க தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் மாட்டின் கொழுப்பு மூலம் விமானத்தை இயக்குவதற்காக மேற்கொண்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது.

தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.

குறிப்பாக விமானங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்த, விலங்குகளின் கொழுப்பிலிருந்து விமானங்களுக்கு எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன் சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் எரிபொருளில் இதன் அளவு குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த அளவு அதிகரிக்கும் போது எரிபொருளில் உள்ள ரசாயனங்கள் காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும்.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் விலை மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டயும் கருத்தில் கொண்டு பல விமான சேவை நிறுவனங்களும் தங்கள் செலவுகளை குறைக்கவும் மாசுபாட்டை கட்டுக்குள் வைக்கவும் பல மாற்று திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சூரிச் சென்ற விமானப் பயணத்தின் 30% எரிபொருள் சுமை, கரினாடா என்னும் ஒருவகையான கடுகிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருள் ஆகும்.

அதேபோல், விர்ஜினியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் தனது வணிக விமானத்தை இயக்க பகுதி அளவில் ஆல்கஹால் பயன்படுத்தியாக தெரிவித்தது.

மேலும், புதிதாக துவக்கப்பட்ட நிறுவனம் ஒன்று, கிரேக்க தயிர் கழிவுகளில் உள்ள நுண்ணுயிரிகளை உயிரி எண்ணெய்களாக மாற்றும் முறையில் ஒரு நொதிப்பு உயிரியக்கத்தை உருவாக்கியது.

சமீபத்தில், டெல்டா சுத்திகரிப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அகிலிக்ஸ், பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் செயற்கை மூலப்பொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஜெட் எரிபொருளை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் மாட்டின் கொழுப்பில் இருந்து எரிபொருள் தயாரிக்க பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்த ஆராய்ச்சியில் வெற்றிகண்ட நிறுவனம் கோழி கொழுப்பில் இருந்தும் விமானத்துக்கான எரிபொருள் தயாரித்துள்ளது

Sharing is caring!