பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 140 ரூபாவாகவும் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 167 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓட்டோ டீசலின் விலை ஒரு லிட்டர் 111 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!