பெண்ணொருவர் கொலை

புத்தளம் – ஆனமடுவ, புனம்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாய், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டவாறு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

66 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் 3 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

கொலைச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring!