பெண் விமான பணியார்கள் மட்டும் கொண்ட விமானம்

வரலாற்றில் முதன்முறையாக பெண் விமானி அடங்கலாக, முழுமையாக பெண் விமானப் பணியாளர்களைக் கொண்ட விமானம் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் UL 306 விமானமே சிங்கப்பூர் நோக்கி இன்று காலை புறப்பட்டது.

விமானத்தின் செயற்படுத்தல் குழுவில் 8 பெண்கள் உள்ளடங்கியுள்ளதுடன், விமானியாக கெப்டன் சிம்ரன் கும்மன் செயற்பட்டார்.

முதன்நிலை அதிகாரியாக மனீஷா நம்புகே செயற்படுவதுடன், விமான குழுவின் தலைமை அதிகாரியாக மிரின்டா ருட்ரிகொஸ் செயற்படுகிறார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் விமான பணியாளர் குழுவுடன் 177 பயணிகளை ஏற்றியவாறு பயணித்த இந்த விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

 

Sharing is caring!