பெரஹராவில் யானையொன்று குழப்பமடைந்ததில் 31 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற பெரஹராவில் யானையொன்று குழப்பமடைந்ததில் 31 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யானை குழப்படைந்ததையடுத்து, அச்சமடைந்த மக்கள் தப்பியோட முயன்றபோது வீழ்ந்ததில் காயமடைந்துள்ளனர்.

Sharing is caring!