பெரிய வெங்காய விற்பனையில் இலாபம்

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, உள்ளூர் உற்பத்தியாளர்கள் இலாபமடைந்துள்ளனர்.

தற்போது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலை கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 105 ரூபா முதல் 110 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளனர்.

கெட்டலவ, கொக்கவெவ, கிவுலேகட மற்றும் மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் பெரிய வெங்காயம் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் 1700 ஏக்கரில் பெரிய வெங்காயம் செய்கையிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!