பெருந்தொகையான பணம் கொள்ளை
புளத்சிங்கள பிரதேசத்தில் பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்களால் மிளகாய் தூள் வீசப்பட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுமார் 20 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் பணத்தை எடுத்துச் சென்ற நிலையில், அவர்களை வழிமறித்த சிலர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S