பெருமெடுப்பில் தொடங்கிய விபத்து, அவசர சிகிச்சை பிரிவு முடங்கியது ஏன்?

சாவகச்சேரி பொது வைத்தியசாலையில் பெருமெடுப்பில் அமைக்க தொடங்கிய விபத்து சிகிச்சை பிரிவின் வேலைகள் பூர்த்தியாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சினால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ 9 முதன்மைச் சாலையுடன்  இணைந்துள்ள சாவகச்சேரி ஆதார மருத்துவமனை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் அவசர விபத்து சிகிச்சை பிரிவுகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. சாவகச்சேரி மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவு வேலைகளின் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்ட போதிலும், சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்கள் இன்னமும் வந்து பொருத்தப்படாததால் சிகிச்சைப் பிரிவுகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. சாலை விபத்துகளில் காயமடைவோர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்.போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர். யாழ்.போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர விபத்துப் பிரிவுக்கு நோயாளர்களை கொண்டு செல்ல எடுக்கும் அரைமணி நேரத்தில், சாவகச்சேரி மருத்துவமனை அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவு இயங்குமாயின் உயிராபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியுமென பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Sharing is caring!