பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், பதவி இராஜினாமா

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பெரும்பான்மையை நிரூபிக்கும் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Sharing is caring!