பெரும்பாலான தேங்காய் எண்ணெய், நுகர்வுக்கு உகந்ததல்ல

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான தேங்காய் எண்ணெய், நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் வகைகளின் சுமார் 200 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பரிசோதனைகளின்போது, தேங்காய் எண்ணெயில் வேறு எண்ணெய் வகைகள் கலந்துள்ளதாக தேசிய நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், நுகர்வுக்கு உகந்ததல்லாத கலப்பு எண்ணெயை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சமந்தா கருணாரட்ன கூறியுள்ளார்.

சுத்தமான தேங்காய் எண்ணெயை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Sharing is caring!