பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சில பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சில இன்று (29), பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.

தெமடகொடயில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையக வளாகத்தில், ​நேற்று (28) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற அர்ஜூன ரணத்துங்கவை கைது செய்யும்வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என, இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் கே.ஜே. பிரேமாந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் நேற்றிரவு, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதன்போது, கொழும்பிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தபோது, களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் முடிவடையும் வரை எரிபொருள் வழங்குவதாக அங்கு சேவையிலிருந்த ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!