பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை, இன்று (15) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

பேக்கரி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் பொருட்களின் விலை அதிகரிப்பதால், தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என பேக்கரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பாணின் விலை தொடர்பில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாண் விலை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மானியத்தைக் கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ள அதேநேரம், அவ்வாறு மானியம் ஏதும் வழங்கப்படவில்லை எனின், பாணின் விலையையும் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் அதிகரிக்க நேரிடும் என இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!