பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேன விளக்கமறியலில்

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறிகள் மோசடி தொடர்பில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளராக செயற்பட்ட ஜெஃப்ரி அலோசியஸூக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Sharing is caring!