பொதுத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இந்த தகவலை கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்டார்.

எதிர்வரும் 03 மாதங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பார் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது பதிலளித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அப்படியான எந்த முடிவும் அவர் எடுக்கவில்லை என்றார்.

Sharing is caring!