பொதுமக்களுக்காக பாராளுமன்ற கெலரி திறக்கப்படும்

பாராளுமன்ற கெலரி எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வழமை போன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பாடசாலை மாணவர்கள், விசேட அதிதிகளுக்கான கெலரிகள் திறக்கப்படவுள்ளதாக பிரதி படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையுடன், பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல்களினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற கெலரி மூடப்பட்டது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது சேதப்படுத்தப்பட்ட பாராளுமன்ற சொத்துக்கள் தற்போது திருத்தப்படுவதாகவும் நரேந்திர பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!