பொருளாதார அபிவிருத்திக்காக கடமைகளை சரிவர ஆற்றுமாறு அரச உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை

நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தச் சந்தர்ப்பத்தில், பொருளாதார அபிவிருத்திக்காக கடமைகளை சரிவர ஆற்றுமாறு அரச உத்தியோகத்தர்களிடம் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் அமைதியாகவும் அதேபோன்று பொறுப்புடனும் செயற்படுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring!