பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு முன்னதாக அந்த பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வௌியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

80 வீத வரவு உள்ள மாணவர்களுக்கே பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்படும் நிலையில், அவ்வாறு கணிப்பீடு செய்யாமல் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்குமாறு சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பீடத்துக்குறிய மொத்த மாணவர்களில் 97 வீதமான மாணவர்களுக்கு சரியான வரவு வீதம் இருப்பதாகவும், எஞ்சிய 03 வீதமான மாணவர்களுக்கே வரவு வீதம் குறைவாக இருப்பதாகவும், அந்த 03 வீதமான மாணவர்களே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உபுல் பீ. திசாநாயக்க தெரிவித்தார்.

Sharing is caring!