பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் இடைநிறுத்தம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றத்தை உடன் அமுலுக்குவரும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக இந்த இடமாற்றங்கள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

72 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு கடந்த 4 ஆம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவர்களில் 27 பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குகின்றனர்.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரையின் கீழ், பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றங்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!