பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள்

கடந்த 3 வருடங்களுக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு எட்டப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க கூறியுள்ளார்.

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Sharing is caring!