பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள்

கடந்த மூன்று வருட காலப் பகுதிக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடமையை ஒழுங்காக நிறைவேற்றாமை குறித்தே பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கடமையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை விரைவாக விசாரணை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Sharing is caring!