பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் தாக்குதல்

சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பாராளுமன்றத்தினுள் பிரவேசித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் தாக்குதலுக்கு இலக்காகினர்.

இதன்போது காயமடைந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள மருத்துவப் பிரிவில் இன்று மாலை சிகிக்சை பெற்றுள்ளனர்.

சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Sharing is caring!