பொலிஸ் வாகனம் கடத்தல் தொடர்பில் மேலதிக பொலிஸார் வரவழைப்பு

கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று பொலிஸ் வாகனம் கடத்தல் தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்திலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப் பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நால்வரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!