பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்
குழு மோதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் மீது இனந்தெரியாத குழுவினர் கண்ணாடிப் போத்தலினால் நேற்றுக் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கரணவாய் பகுதியில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் மீது கத்திக் குத்து இடம்பெற்றது. நெல்லியடியில் இடம்பெற்ற இசைக்குழு நிகழ்ச்சியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தக் கத்திக் குத்து இடம்பெற்றதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு உள்ளானவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற சாரதியை நெல்லியடிப் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். விசாரணைக்கு சமூகமளிக்க முச்சக்கர வண்டிச் சாரதி வரும்போது, அவரை இடைமறித்த கும்பல், முச்சக்கர வண்டியையும் தாக்கிச் சேதப்படுத்தியதுடன் சாரதியை போத்ததால் குத்திக் காயப்படுத்தியது.சாரதி காயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.