பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகளில் சிலர் ஆர்ப்பாட்டம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சி.சி.டி.வி. கெமரா பொருத்தப்பட்ட தூணில் ஏறி சுமார் 50 கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (21) காலை 7 மணி முதல் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த வாரம் முதல் குறித்த சிறைச்சாலையில் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் ஆர்ப்பாட்டம்

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சோதனை நடவடிக்கையை எதிர்த்து கைதிகள் ஆர்ப்பாட்டம்

Posted by Newsfirst.lk on Saturday, October 20, 2018

Sharing is caring!