போக்குவரத்துச் சபையால் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு
இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு சம்பந்தமாக பதில் வழங்குவதற்கு அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளின் படி நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதன் மூலம் 140 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது. இந்த நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S