போக்குவரத்து கட்டணங்கள் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து கட்டணங்கள் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் கொள்கலன் சாரதிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

எரிபொருள் விநியோகிக்கும் தனியார் கொள்கலன் உரிமையாளர்களுக்கான கொடுப்பனவு கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டதாக பெட்ரோலிய வள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, திறன் அடிப்படையில் 12.43 சதம், 16.43 சதம் மற்றும் 20 ரூபாவினால் தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார சிக்கல்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், டீசல் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தமது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லையென தனியார் கொள்கலன் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய வள கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகரவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

விலைத்திருத்த குழுவினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த குழுவின் அறிக்கையை நிறைவேற்று சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்து பின்னர் அது தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Sharing is caring!