போக்குவரத்து குற்றத்திற்கான அபராதம் 15 முதல் அமுல்

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதத் தொகை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், 33 விதமான போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதம் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதற்காக புதிய தண்டப் பத்திரம் அடங்கிய 1 இலட்சத்திற்கும் அதிக புத்தகங்கள் நாடளாவிய ரீதியில் 489 பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப்பாதுகாப்பு தொடர்பான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இதற்கான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!