போதைப்பொருட்களுடன் 48,129 பேர் கைது

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருட்களுடன் 48,129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19,441 பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 173 கிலோ 319 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2,975 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டைச் சேர்ந்த 22 பேரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, நேபாளம், மாலைத்தீவு, ஜேர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!