போதைப்பொருள் உருண்டைகள் விழுங்கியிருந்த நிலையில் சந்தேகநபர்

பிரேசிலிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் 100 போதைப்பொருள் உருண்டைகள் விழுங்கியிருந்த நிலையில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சுங்க திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அவற்றின் பெறுமதி சுமார் ரூபா ஒன்றரை கோடியாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினமும் (30) 30 வயதான நபர் ஒருவர் இதேபோன்று போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!