போதைப்பொருள் குற்றங்களை அறிவிப்பதற்கு துரித தொலைபேசி இலக்கம்

போதைப்பொருள் குற்றங்களை அறிவிப்பதற்கு, ஜனாதிபதியினால் துரித தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், 1984 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் தேசிய திட்டம் இன்று (21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்ஙதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வௌியிடுகையில்,

போதைப்பொருள் காணப்படும் இடங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு நாங்கள் இன்று உங்களுக்கு புதிய இலக்கம் ஒன்றை வழங்கியுள்ளோம். அந்த இலக்கமானது 1984 ஆகும். சட்டவிரோதமாக எங்காவது போதைப்பொருள் காணப்படுமாயின், இந்த இலக்கத்திற்கு அறியத்தாருங்கள். குறித்த இலக்கத்திற்கு வழங்கப்படும் தகவல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தகவல் வழங்குநர் தொடர்பில் இரகசியம் பேணப்படும். தகவல் வழங்குநர் தொடர்பில் வௌியில் தெரிவிக்கப்படமாட்டாது. ஆகவே, அச்சமின்றி தகவல்களை வழங்குங்கள். நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்

எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்று முதல் எதிர்வரும் 28 அம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Sharing is caring!