போதைப் பொருள் வியாபாரத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மஹிந்த

போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் வடக்கு அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தெற்கிலிருந்தும் முன்வைக்கப்படுவதாகவும், இந்த போதைப் பொருள் வியாபாரத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த போதைப் பொருள் தொற்று நோயினால் இன்று சாதாரண பிள்ளையொருவர் வீதியில் பயணிக்க முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டின் இளைய தலைமுறையினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இன்றைய சகோதார மொழி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!