போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவி வழங்க தயார்

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு எந்த வேளையிலும் உதவி வழங்க தயாராகவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் விசேட படையணியொன்றை உருவாக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

Sharing is caring!