மகனை கொடூரமாக கத்தியால் வெட்டிவிட்டு தந்தை தற்கொலை

யாழ்ப்பாணத்தில் மகனை கொடூரமாக கத்தியால் வெட்டிவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி தேவரையாளி பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த தந்தை மகனை கத்தியால் இரண்டு தடவைகள் வெட்டியுள்ளார். தந்தை மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குறித்த சம்பவம் கரவெட்டி தேவரையாளி பகுதியில் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

இதனையடுத்து படுகாயமடைந்த மகனை மந்திகை வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் தந்தையின் செயல் குறித்து நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இரவு 10 மணியளவில் தந்தை தனது வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!