மகாபொல புலமைப்பரிசில்

பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 30 சத வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இவ்வருடம் வழமையைவிட மேலதிகமாக 4,000 பட்டதாரி மாணவர்கள் மகாபொல புலமைப்பரிசில் உதவியைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, வருடாந்தம் 15 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே மகாபொல புலமைப்பரிசிலும் உதவித் தொகையும் வழங்கப்பட்டு வந்த நிலையில் அரசாங்கம் பெற்றோரின் வருடாந்த வருமான எல்லையை 15 இலட்சம் ரூபாவரை அதிகரித்துள்ளது.

தற்போது 7,000 பட்டதாரிகள் வருடாந்தம் மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகையை பெற்று வருவதாக மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஒரு மாணவருக்கு மாதாந்தம் 5000.00 ரூபா வீதம் மகாபொல புலமைப் பரிசில் நிதி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!