மகா சூபவங்சய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு

பிரபல சமயற்கலை நிபுணரான கலாநிதி பப்லிஸ் சில்வாவினால் எழுதப்பட்ட மகா சூபவங்சய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (27) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

இந்நூலின் முதற் பிரதி கலாநிதி பப்லிஸ் சில்வாவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தனது 61 வருட அனுபவங்கள் மற்றும் சமயற்கலையில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல் சிங்கள மொழியில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி ஜனாதிபதிவின் தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்த பெறுமதியான நூலை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்து அதனூடாக தேசிய உணவின் மகிமையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி பப்லிஸ் சில்வாவிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நூலை ஆங்கில மொழியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் அதற்கு தேவையான அனுசரணை பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கீர்த்திமிக்க வரலாற்றுக்கும் கலாசாரத்திற்கும் உரிமைகோரும் உன்னத தேசமான நாம் அந்த கடந்தகால பங்களிப்புகளை மென்மேலும் எழுச்சிபெறச் செய்து எமது தாய் நாட்டின் பெருமையை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார்

கலாநிதி பப்லிஸ் சில்வாவின் மகா சூபவங்சய நூலை ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்ததன் மூலம் எமது நாட்டின் வரலாற்றையும் கலாசாரத்தையும் சர்வதேசம் மென்மேலும் புரிந்துகொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹூனுபிட்டிய கங்காராம விகாராதிபதி சங்கைக்குரிய கலபொட ஞானீஸ்ஸர நாயக்க தேரர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sharing is caring!