மகிந்த ராஜ­பக்­ச­வி­னால் தனது உயி­ருக்கு ஆபத்து இருந்­தது என்பது கட்­டுக்­க­தையே

மகிந்த ராஜ­பக்­ச­வி­னால் தனது உயி­ருக்கு ஆபத்து இருந்­தது என்று கூறி­யது, தேர்­தல் மேடை­யைக் கவ­ரு­வ­தற்­கான கட்­டுக்­க­தையே என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.

சிலோன் ருடே ஊட­கத்­துக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேர்­கா­ணல் வழங்­கி­யி­ருந்­தார். அதி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

உங்­க­ளின் உயி­ருக்கு ஆபத்து இருந்­த­தாக நீங்­கள் திரும்­பத் திரும்ப கூறி வந்­தீர்­கள். அப்­ப­டி­யி­ருக்­கும் போது, எந்த நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் மகிந்த ராஜ­பக்­சவை தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­தீர்­கள்? என்று அவ­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன பதி­ல­ளித்­தார்.

“அவை­யெல்­லாம் அர­சி­யல் மேடை­க­ளில் குற்­றம்­சாட்­டப்­பட்ட வெறும் அர­சி­யல் பேச்­சுக்­கள். ஆனால் அண்­மை­யது என்­னைக் கொல்­வ­தற்­கான தெளி­வான திட்­டம் என்று அவர் பதி­ல­ளித்­தார்.

அப்­ப­டி­யா­னால், ராஜ­பக்ச தேர்­த­லில் வென்­றி­ருந்­தால், நீங்­க­ளும் உங்­க­ளின் குடும்­ப­மும், ஆறு அடி நிலத்­துக்­குள் புதைக்­கப்­பட்­டி­ருப்­போம் என்று தெளி­வாக கூறி­யி­ருந்­தீர்­களே? என்று கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்கு அவர், மகிந்த ராஜ­பக்ச என்­னைப் படு­கொலை செய்ய சதித்­திட்­டம் தீட்­டி­னார் என்று எந்த தக­வ­லும் இல்லை. அவை வெறு­மனே தேர்­தல் மேடை­க­ளில் அங்­கி­ருப்­ப­வர்­க­ளைக் கவ­ரு­வ­தற்­காக கூறி­யவை என்று பதி­ல­ளித்­துள்­ளார். அது மட்­டு­மல்­லாது பதி­லைக் கூறி விட்டு செவ்வி கண்ட ஊட­க­வி­ய­லா­ள­ரைப் பார்த்து நக்­க­லாக சிரித்­து­முள்­ளார்.

அரச தலை­வர் தேர்­த­லின் போது, தன்­னைப் படு­கொலை செய்ய சதித் திட்­டம் தீட்­டப்­பட்­டுள்­ள­தாக, குண்­டு­து­ளைக்­காத அங்­கி­யு­டன் பரப்­புரை மேடை­க­ளில் தோன்­றிய மைத்­தி­ரி­பால சிறி­சேன, தேர்­த­லில் வெற்றி பெற்ற பின்­ன­ரும் மகிந்த ராஜ­பக்­ச­வி­னால் தனது உயி­ருக்கு ஆபத்து இருந்­தது என்று கூறி­யி­ருந்­தார்.

2015ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி, பன்­னாட்டு ஊட­க­மொன்று வழங்­கிய நேர்­கா­ண­லில், நானும் என்­னு­டைய பிள்­ளை­க­ளும், பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்­காக அரச தலை­வர் தேர்­தல் தினத்­தன்று, இரவு நேரத்­தில், குரு­நா­க­ல­வில் உள்ள எனது நண்­பன் ஒரு­வ­ரின் வீட்­டில் மறைந்­தி­ருந்­தோம். தேர்­த­லில் நான் தோல்­வி­யுற்­றி­ருந்­தால், என்­னைச் சிறை­யி­ல­டைப்­ப­தற்­கும் எனது குடும்­பத்­தி­னரை அழிப்­ப­தற்­கும் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

தேர்­தல் முடி­வு­கள் மாறி­யி­ருந்­தால், நானும் எனது குடும்­ப­மும், இந்­நே­ரம் உயி­ரோடு இருந்­தி­ருப்­போமா எனத் தெரி­ய­வில்லை. அது­தான் மகிந்­த­வின் ஜன­நா­ய­கம். அது எனக்கு நன்­றா­கத் தெரி­யும். இவர்­கள் வெற்­றி­பெற்று, நான் தோல்­வி­ய­டைந்­தி­ருந்­தால், இந்த நேரம் பலர் கொல்­லப்­பட்டு, பல­ரது கைகால்­கள் உடைக்­கப்­பட்­டி­ருப்­ப­து­டன் பலர் சிறைக்­கும் சென்­றி­ருப்­பர், என்று மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.

Sharing is caring!