மக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை

நீரையும் மின்சாரத்தையும் வீண் விரயம் செய்யாது நாட்டு மக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், எக்காரணம் கொண்டும் நீர், மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது. மேலும் மின்துண்டிப்போ அல்லது நீர் விநியோகத்திற்கு தடையோ ஏற்படாது. அதற்கு மாறாக சில பிரசேதங்களில் மாத்திரம் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வரட்சியான காலநிலை தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் கே.ஏ அன்சார் மற்றும் மின்சார சபை தலைவர் அநுர விஜயபால ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Sharing is caring!