மக்கள் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது

ஐக்கிய தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. பேரணியில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் காலி முகத்திடலில் ஒன்று திரண்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த பேரணி இன்று பிற்பகல் காலி முகத்திடலில்  சற்று முன் ஆரம்பமாகியது.

உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் புதிய பிரதமரின் நியமனம் ஆகிய வெற்றிகளை கொண்டாடும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள இந்த மக்கள் எழுச்சி பேரணி, நீதிக்கான போராட்டம் என்ற தொனிப்பொருளில் நடைபெறுகின்றது.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!