” மக்கள் மகிமை ”
பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின் ” மக்கள் மகிமை ” கூட்டம் இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்து மேடையில் அமர்ந்தனர்.
பாராளுமன்றத்திற்கு செல்லும் நுழைவுப் பாதைக்கு அருகில் இந்த கூட்டம் மற்றும் பேரணி இன்று மாலை இடம்பெற்றது.
இந்த நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி தான் ஏன் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமரான நியமித்தேன் என விளக்கமளித்ததுடன் ரணில் விக்ரமசிங்க அணியினரை ” வண்ணாத்துப்பூச்சிகள் ” எனவும் வர்ணித்தார்.
இதேவேளை, தான் அனுபவித்த இன்னல்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது மனந்திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமிழிலும் உரை நிகழ்த்தியிருந்ததுடன் ” இனிமேல் தமிழ் முஸ்லிம் மக்கள் என்னை நம்பலாம் ” எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.