மக்கள் வங்கிக் கிளையில் பாரிய தீ விபத்து…பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்..!!

வடமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது.

அங்கிருந்த மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்து ஏற்படக் காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.தீ விபத்து தொடர்பில் மக்கள் உடனடியாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் மற்றும் கிளை முகாமையாளர் ஆகியோருக்கு அறிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.மின் பிறப்பாக்கி அறை, மின் பிறப்பாக்கி என்பன முழுதாக எரிந்து நாசமானது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Sharing is caring!