மடுத்திருப்பலியின் போது நடந்த விபரீதம்

மன்னார் மடு திருத்தலத்தின் திருவிழா திருப்பலி கடந்த (18.08.2018) இன்று இலட்ஷக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்றது.

காலை 6.20 மணிக்கு தொடங்கிய குறித்த திருப்பலி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது காலை 08.00 மணியளவில் திருத்தலப்பகுதியில் வீசிய அதி வேக காற்றினால் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாதை பக்தர்களுக்கு மேல் விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறித்த திருப்பலியில் கலந்து கொண்ட சக பக்தர்கள் மேலும் தெரிவித்தனர்.

Sharing is caring!