மட்டக்களப்பில் வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கவலை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வீடமைப்பு திட்டத்தினை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்திலேயே தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடமுடியாத நிலையிருந்ததாகவும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த நல்லாட்சியிலும் தேசிய கீதம் தமிழர்கள் வாழும் பகுதியில் ஒரு மொழியில் பாடப்பட்டது கவலைக்குரிய விடயம் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!