மட்டக்களப்பு மார்க்கத்தின் ஊடாக பொலன்னறுவை வரை ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மார்க்கத்தின் ஊடாக ரயில் போக்குவரத்து பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் 3 யானைகள் மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ளது.

புனானி மற்றும் வெலிகந்த பகுதிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 3 யானைகளும் உயிரிழந்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் ரயிலின் எஞ்சின் மற்றும் 2 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

ரயிலைத் தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் குழுவொன்று ஈடுபட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!