மட்டக்களப்பு விபத்து…விரிவுரையாளர் பலி

மட்டக்களப்பில் இன்று (31) இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் – குடியிருப்பு பிரதான வீதியில் இன்று காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றின் மீது தனியார் பஸ் ஒன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் விஞ்ஞானப் பிரிவு விரிவுரையாளர் கந்தக்குட்டி கோமலேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

செங்கலடி – சந்தை வீதியிலுள்ள தனது வீட்டில் இருந்து ஆசிரியர் கலாசாலைக்கு செல்வதற்காக இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார்.

திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று ஏறாவூர் – குடியிருப்பு பிரதான வீதியில் அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயது கந்தக்குட்டி கோமலேஸ்வரன், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் விஞ்ஞானப் பிரிவு விரிவுரையாளராக கடந்த 3 வருடங்களாக சேவையாற்றி வந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!