மட்டுவிலில் 58 வயது பெண்ணின் தைரியம்…..தொடையை கவ்விய முதலை….தூக்கி எறிந்தார் வெளியே

யாழ்.மட்டுவில் பகுதியில் மாடு குளிப்பாட்ட சென்ற வயதான பெண்மணியை முதலை கடித்த்து காயப்படுத்திய நிலையில் சிகிச்சைக்காக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மட்டுவில் கிழக்கை சேர்ந்த 58 வயதுடைய நாகநதி கிருஷ்ணமூர்த்தி என்பவரே படுகாயமடைந்தவராவார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் குளத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.03.19) மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டு இருந்த வேளை குளத்தில் இருந்த முதலை அவரது தொடை பகுதியை கெளவிப் பிடித்துள்ளது.

உடனே விரைந்து செயற்பட்ட அவர் முதலையின் தாடை பகுதியை கைகளால் இழுத்து பிழந்து முதலையை தூக்கி குளத்தில் வெளியே வீசியுள்ளார்.

அதன் பின்னர் தொலை பேசி ஊடாக உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து அங்கு விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

Sharing is caring!