மட்பாண்ட தொழிற்துறையை ஊக்குவித்து, தயாரிப்புப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

தம்புள்ளை பிரதேசத்தில் மட்பாண்ட தொழிற்துறையை ஊக்குவித்து, தயாரிப்புப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் கலேவெல, இனாமலுவ ஆகிய பகுதிகளில் மட்பாண்டத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளவும் வீடுகளை அமைத்துக்கொள்ளவும் வங்கிக் கடன் வசதிகளை செய்துகொடுக்க மாகாண அமைச்சு தீர்மானித்துள்ளது.

Sharing is caring!