மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 200 பேர் இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்

தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 200 பேர் இருப்பிடங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

50 குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று (03) அதிகாலை ஒரு மணியளவில் வெளியேற்றப்பட்ட இவர்கள், தோட்ட ஆலயத்திலும் சனசமூக நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார்.

300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் லூசா தோட்டம் அமைந்துள்ள மலைமுகட்டில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மலைமுகட்டின் சில இடங்களில் கற்பாறைகளும் சரிந்து வீழ்வதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!