மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இன்று (வெள்ளிக்கிழமை) கூறியுள்ளார்.

இதேவேளை கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக கடமையிலுள்ள பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நீர்மட்டம் உயர்ந்து நீர் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளதால், நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாகத் திறக்கப்பட கூடுமென்றும் பொறியிலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகையால் குறித்த நீர்த்தேக்கத்தினை அண்டி வாழும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Sharing is caring!