மதுபானம் மற்றும் மது சார்ந்த உற்பத்தி தொடர்பில் சர்வதேச கொள்கை

மதுபானம் மற்றும் மது சார்ந்த உற்பத்தி தொடர்பில் சர்வதேச கொள்கையொன்று அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தொடருக்கு இணையாக இடம்பெறும் போதைப் பொருள் , தொற்றா நோய் தொடர்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பில் தேசிய அதிகார சபையை ஸ்தாபித்தல், மதுபானங்களை விளம்படுத்துவதை தடுத்தல், போன்ற நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுபானத்தின் மூலம் இலங்கைக்கு பாரியளவில் நிதி கிடைக்கின்ற போதிலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் தீங்குகள் மிகவும் அதிகம் எனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளாதர்.

மதுபான்ங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுவதாகவும் சில நாடுகளால் அதனை கட்டுப்படுத்த இயலவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!