மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய சுமார் 90,000 சாரதிகள் கைது

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய சுமார் 90,000 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இதன் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரித்துள்ளதாக, பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாளாந்தம், மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சுமார் 450 சாரதிகள் கைது செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கொழும்பு நகரில் மாத்திரம் மதுபோதையுடன் 50 சாரதிகள் கைது செய்யப்படுகின்றனர்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Sharing is caring!